டெல்லி: இந்தியாவில் கடந்த 75 நாட்களில் குறைந்த அளவாக இன்று 60,471 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் கொரோனாவில் இருந்து குணமடைவோர்  எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பின் 2வது அலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. கடந்த மாதம் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்த நிலையில், சுமார் 75 நாட்களுக்கு பிறகு இன்று பாதிப்பு 60 ஆயிரமாக உள்ளது. 8வது நாளாக இன்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது.

கடந்த 24மணி நேரத்தில், 70,421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டநிலையில், இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 95 லட்சத்து 70 ஆயிரத்து 881 ஆக உயர்வடைந்து உள்ளது. இது 5சதவிகிதத்திற்கும் குறைவு என்றும், வாராந்திர பாதிப்பு விகிதம் 4.39%. ஆக உள்ளது. அதேவெளையில் தினசரி பாதிப்பு விகிதம் கடந்த 8 நாட்களில் 3.45% ஆக குறைந்துள்ளது.

இதில் மகிழ்ச்சிகரமான செய்தி என்னவென்றால், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் வெகுவாக அதிகரித்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 525 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 82 லட்சத்து 80 ஆயிரத்து 472 ஆக உயர்வடைந்து உள்ளது. இதனால் குணடைந்தோர் விகிதம் 95.64% ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில்  கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 2,726 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,77,031 ஆக உயர்ந்து உள்ளது.

தற்போது 9,13,378 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 25 கோடியே 90 லட்சத்து 44 ஆயிரத்து 072 ஆக உள்ளது.

நாடு முழுவதும்  ஜூன் 14 வரை 38,13,75,984  மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இவற்றில் 17,51,358 மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டன

இவ்வாறு ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.