சென்னை: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், சென்னை ஐஐடியில் இதுவரை நடத்தப்பட்டுள்ள சோதனையில் 29 மாணவர் உள்பட 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று 39 பேருக்கு கொரோனா தெற்று உறுதியானது. இதனால் 256 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அதிலும், சென்னையில் மட்டும் 21  பேர் பாதிக்கப் பட்டு உள்ளனர்.இந்த நிலையில் சென்னை ஐஐடியில் மட்டும் நேற்று முன்தினம் மூன்று பேருக்கு தொற்று உறுதியானது. இந்நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த 9 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. இதையடுத்து,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்   ஆய்வு செய்து தேவயான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினார். அதன்படி, அங்குள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று சமார்  700 பேருக்கு கொரோனா தொற்று சோதனை செய்ததில் 30 பேருக்கு தொற்று உறுதி. இதில் மாணவர்கள் 29 பேர், பணியாளர் ஒருவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களில் தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறத்தப்பட்டு உள்ளது.