Skip to content
  • Thu. Sep 24th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
சேலம் மாவட்ட செய்திகள் தமிழ் நாடு

தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை… எடப்பாடி உறுதி

Jun 11, 2020

சேலம்:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல்,  சமூக பரவலாக மாறவில்லை என்று சேலத்தில் நடைபெற்ற மேம்பாலம் திறப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ரூ.441 கோடியில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலம் மற்றும்  ரெயில்வே மேம்பாலத்தை தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்து பேசினார். அப்போது,
சேலம் மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் விதமாக ஈரடுக்கு மேம்பாலம் திறக்கப்பட்டு என்று கூறியவர்,  ஈரடுக்கு மேம்பாலத்துக்கு ஜெயலலிதா பெயரும், ரெயில்வே மேம்பாலத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரும் சூட்டினார்.
தொடர்ந்து பேசியவர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு உள்பட அனைத்து புள்ளி விவரங்களும் வெளிப்படையாக அறிவிக்கப்படுகிறது. தமிழகஅரசு  எதையும் மறைக்கவில்லை; மறைக்கவும் முடியாது. உயிரிழப்புகளை மறைப்பதால் அரசுக்கு என்ன பயன்? என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் கொரோனாவால் ம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது என்று தெரிவித்தவர்,  கொரோனா பாதிப்புடன் பல்வேறு நோய் உள்ளவர்களால் தான் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது என்று விளக்கம் அளித்த எடப்பாடி,  இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு சதவிகிதம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் தான் அதிக அளவில் வென்டிலேட்டர்கள் உள்ளன என்று கூறினார்.

சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிவித்தவர், சேலம் உள்பட பல மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால் கொரோனா வேகமாக பரவிவிடும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை  சமூக பரவலாக மாறவில்லை என்றும்,  மக்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றினால் தான் கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Post navigation

சேலத்தில் ஈரடுக்கு புதிய பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…
‘குழந்தைகளின் வருமானம் நாட்டிற்கு அவமானம்’ தமிழக முதல்வரின் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினச் செய்தி…

Related Post

தமிழ் நாடு

வீட்டுக்கூரை சூரியசக்தி திட்டத்திற்கு தமிழக அரசு மானியம்… சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்!

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer