டெல்லி: தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த  3,85,66,027 ஆக உயர்நதுள்ளது.  மரணமடைந்தோர் மொத்தம் 4,88,396 ஆகவும், இதுவரை 3,60,58,806 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், தற்போது 20,18,825 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 30 லட்சத்து 42 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் 62,007 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன்,  இந்தியாவில் தமிழ்நாடு, மராட்டியம், கர்நாடகா, கேரளா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொற்று பாதிப்பு அதிகரித்து வரும்,  இந்த மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரக் குழுக்களை அனுப்பி உள்ளோம், அவர்கள் அங்குள்ள நிலைமையை தொடர்ந்து  மதிப்பாய்வு செய்து வருகிறார்கள் என்றவர்,

சிகிச்சையில் உள்ள வழக்குகளின் அடிப்படையில் முதல் 10 மாநிலங்களாக, மராட்டியம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், குஜராத், ஒடிசா, டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகியவை உள்ளன என்றார்.

மேலும், நாட்டில் 15-18 வயதுக்குட்பட்ட 52% குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றவர், நாட்டில் இரண்டு தடுப்பூசிகளுக்கு சந்தை அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று டிசிஜிஐக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தேசிய கட்டுப்பாட்டாளரின் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.