சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், 3 மாத ஒப்பந்த அடிப்படையில் 675 புதிய மருத்துவர்களை தமிழகஅரசு நியமனம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. தற்போதைய நிலையில், மொத்த பாதிப்பு 17,728 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், அதிகரித்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் இடம் இல்லாததால், நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்பட பல்வேறு அரசு பள்ளிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவர்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்து அறிவித்து உள்ளது.
அதன்படி, மருத்துவ தேர்வாணையத்தில் பதிவு செய்த மருத்துவர்கள் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ரூ.40 ஆயிரம் தொகுப்பூதியத்தில், 3 மாதம் தற்காலிகமாக பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
விருப்பமுள்ளவர்கள் உடனடியாக பணி சேர வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 3 மாத காலத்திற்கு பின், தேவைக்கேற்ப பணி நீட்டிப்பு வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்து உள்ளது.
இந்த நியமனம், தேசிய நலவாழ்வு இயக்ககத்தின் மூலம் நடைபெற வேண்டும் என சுகாதார துறை உத்தரவிட்டு உள்ளது.
Patrikai.com official YouTube Channel