புதுடெல்லி: கொரோனா பாதிப்பை எதிர்கொள்­ளும் வகை­யில் அறி­மு­கம் செய்­யப்­பட்ட குறு­கியகால மருத்துவ காப்பீடு பாலி­சி­களை, இந்தாண்டு செப்டம்பர் மாதம் வரை வழங்க, காப்­பீட்டு ஒழுங்­கு­முறை ஆணையம் அனு­மதி அளித்துள்­ளது.

கடந்தாண்டு கொரோனா தொற்று தீவிரமானபோது, இந்த பாதிப்­பிற்­கான மருத்­துவ செலவை எதிர்­கொள்­ளும் வகையில், கொரோனா கவச் மற்­றும் கொரோனா ரக்­‌ஷக் ஆகிய குறு­கிய கால மருத்­துவ காப்­பீடு பாலி­சி­கள் அறிமுகம் செய்­யப்­பட்­டன.

இந்த பாலி­சி­க­ளுக்­கான நெறி­மு­றை­களை, கடந்தாண்டு ஜூன் மாதம், காப்­பீட்டு ஒழுங்கு­முறை ஆணை­யம் வெளி­யிட்­டது. மூன்று மாதம், ஆறு மாதம் மற்­றும் ஒன்­பது மாத காலம் கொண்டு இந்த பாலி­சி­கள் அமைந்­தி­ருந்­தன.

இந்தாண்டு மார்ச் மாதம் வரை, இந்த பாலிசி­கள் அம­லில் இருக்­கும் என அறிவிக்கப்­பட்­டது. இந்­நிலை­யில், இந்த பாலி­சி­க­ளுக்­கான கால அளவை, இந்தாண்டு செப்­டம்­பர் மாதம் வரை காப்பீடு ஒழுங்­கு­முறை ஆணை­யம் நீட்டித்துள்­ளது.

இத­னை­ய­டுத்து, மேலும் ஆறு மாத காலத்திற்கு, இந்த குறு­கிய கால மருத்­துவ காப்­பீட்டை பெறும் வாய்ப்பு உண்டாகியுள்­ளது. அனைத்து காப்­பீடு நிறு­வ­னங்­களும் இவற்றை வழங்­கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.