டேராடூன்: மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று உத்தரகண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந் நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உத்தரகண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத் கூறி உள்ளதாவது:
மாநில அரசானது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகவே தடுப்பூசியை வழங்கும். மே 1 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறினார்.
இதன்மூலம் கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரகண்ட்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.