டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 43,70,129 ஆக உயர்ந்துள்ள நிலையில், குணமடைந் தோர் எண்ணிக்கையும் 33,98,844 ஆக அதிகரித்து உள்ளது. கடந்த 4 மணி நேரத்தில் 89,706 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நேற்றைய கொரோனா நிலவரம் குறித்து இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 43,70,129 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 89,706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. குணமடைந்தோர் விகிதம் 77.65 சதவீதமாகவும் உள்ளது.
நேற்று மட்டும் 1115 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73890 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 1.70 சதவீதமாக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,23,950ல் இருந்து 33,98,844 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 74894 பேர் குணமடைந்துள்ளனர்.