நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மனநலக் காப்பகத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மனநலக் காப்பகத்தை நிர்வகித்து வரும் நிர்வாகிக்கு கொரோனாதொற்று உறுதியான நிலையில், அவர்மூலம் மற்றவர்களுக்கும் தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் மந்தாரம்புதூரில் உள்ள தனியார் மனநல காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த மனநல காப்பகம் நிர்வாகிஉ உடல்நலம் பாதிப்புக்குள்ளானதால், அவருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மனநல காப்பகத்தில் சிகிசை பெற்று வரும்  80க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யபட்டுள்ளது. அதில் 46 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் அம்மாவட்டத்தில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 15,300 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்திருக்கிறது என்பது குறிப்பிடப்படுகிறது.