சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், மக்கள் கூடும் 9 மார்க்கெட் பகுதிகளை 10 நாட்கள் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.
கொரோனாவின் 2வது அலை தமிழ்நாட்டில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், ஜூன் இறுதி வாரத்தில் இருருந்து படிப்படியாக குறைந்து வந்தது. ஜூலையில் மேலும் குறைந்ததால், தமிழ்நாடு அரசு வழங்கிய தளர்வுகள் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. ஆனால், மக்கள் மற்றும் வணி நிறுகூனங்கள், வியாபாரிகள் கொரோனா கட்டுப்பாடுகளை சரியான முறையில் கடைபிடிக்காததால், கடந்த ஒரு வாரமாக தொற்று பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.
இதனால், தமிழ்நாடு அரசு கொரோனா தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு செய்துள்ளதுடன், கொரோனாவின் அச்சம் இன்னும் முடிவடைந்துவிட வில்லை என்ற நிலையில், அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே பொது இடங்களில் மக்கள் செல்வதும், வியாபார நிறுவனங்கள், சந்தைகள் இயங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் விழிப்புடன் கண்காணிக்க அறிவுறுத்தி உள்ளது. அத்துடன் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளை மூட உத்தரவிட்டு உள்ளது.
சென்னையில் பெரும்பாலான மார்க்கெட் பகுதிகளில் மீண்டும் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. பெரிய வணிக நிறுவனங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், கொரொனா பரவும் அபாயம் அதிகரித்திருப்பதால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைபடுத்த மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் துறை ஆணையாளர் ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்கெட் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள 9 இடங்களில் அங்காடிகள் செயல்பட அனுமதியில்லை.
இதைத்தொடர்ந்து, சென்னையில் இன்று முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை மக்கள் அதிகம் கூடும் 9 மார்க்கெட் பகுதிகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தி.நகர், பாரிஸ் கார்னர், புரசைவாக்கம், அமிஞ்சிகரை, திருவல்லிக்கேணி, ரெட்ஹில்ஸ், திரு வி க நகர், ராயபுரம் ஆகிய சந்தைப் பகுதிகள் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 9 வரை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை,
புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை,
ஜாம் பஜார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி போஸ் சாலையில் குறளகம் முதல் தங்க சாலை சந்திப்பு வரை,
ராயுபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை கடைகள் திறக்க அனுமதி இல்லை.
அமைந்தகரை மார்க்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை
மற்றும் ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை உள்ள வணிக வளாகங்கள், கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 6 மணி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
. மேலும், கொத்தவால்சாவடி மார்க்கெட் நாளை முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 6 மணி வரை செயல்பட அனுமதி இல்லை என்றும் வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடங்களில் வணிக வாளங்கள் மற்றும் அங்காடிகள் இன்று (ஜூலை 31) முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை செயல்பட அனுமதி இல்லை.
கொத்தவால் சாவடி மார்க்கெட் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களுடனான சந்திப்பின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை முடிவு செய்யும்படி கேட்டிருந்தார். கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் மக்கள் அதிக அளவில் கூடுவது தொடர்பாகவும் அவர் கவலை தெரிவித்திருந்தார். இதற்கிடையில், தமிழக அரசு ஆகஸ்ட் 9 வரை மாநிலம் தழுவிய ஊரடங்கை நீட்டித்துள்ளது.