சென்னை: சென்னை ஐஐடியில் இன்று மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை ஐஐடிக்கு படிக்க வந்த வடமாநில மாணவர்கள் மூலம் தொற்று பரவி வருகிறது. இதையடுத்து அங்குள்ள அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று வரை வரை 1676 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 182 பேருக்கு இதுவரை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று பாதிப்பு 171 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் 11 பேருக்கு உறுதியாக 182 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் பலரது சோதனை முடிவுகள் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஐஐடியில் இதுவரை யாருக்கும புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை என்றும், சிகிச்சை பெற்றுவோர் விரைவில் குணமடைந்து வருகிறார்கள் என்று தெரிவித்ததுடன், ஐஐடி முழுவதும்  கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.