சென்னை:

மிழகத்தில் கொரோனா பாதிப்பு என்ன என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை மாவட்டம் வாரியாக பட்டியல் வெளியிட்ட உள்ளது.

இன்றைய (07-04-2020) நிலவரப்படி தமிழக்ததில்  கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ள தாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார். அதுபோல பலி எண்ணிக்கையும் 7 ஆக உயர்ந்து உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 12 அரசு மருத்துவமனை மற்றும் 7 தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை 5305 பேருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், அவர்களில் 690 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் 201 பரிசோதனை முடிவுகள் நிலுவையில் இருப்பதாகவும், இதுவரை 1864 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டமாக சென்னை உள்ளது. இங்கு இதுவரை 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 5ந்தேதி  சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டடோர் எண்ணிக்கை 95 ஆக இருந்த நிலையில், 2 நாளில் 149 ஆக அதிகரித்துள்ளது, அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதைத்தொடர்ந்து கோவையில் 60 பேரும், திண்டுக்கல்லில் 45 பேரும், திருநெல்வேலியில் 38 பேருக்கும், ஈரோட்டில் 32 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உளளது.