டெல்லி:
ந்தியாவில் கொரோனா வைரசால் 13, 387 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  பாதிப்பு,  பலி எஎண்ணிக்கை 437 ஆக அதிகரித்து உள்ளது. அதே வேளையில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கையும்  1749 ஆக உயர்ந்து உள்ளது.
கடந்த 4 நாட்களாக கொரோனா வைரஸ் பிடியில் இருந்த மீண்டு வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது என -மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது தீவிரத்தை காட்டி வருகிறது. அதன் வேகத்தை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி கட்டுப்படுத்தி வருகிறது.

இந்தியாவில்  இன்று காலை நிலவரப்படி, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,387 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனாவுக்கு இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கையும்  437 ஆக உயர்ந்து உள்ளது. அதே வேளையில்,  இந்த நோயில் இருந்து குணமாகி வருவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில், 260 நோயாளிகள் கொரோனா நோயில் இருந்து குணப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டு மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.  நேற்று (வியாழக்கிழமை)  ஒரே நாளில் மட்டும்  83 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்த பின்னர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.