டெல்லி:

லைநகரில் கொரோனா தொற்று பரவலின் ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்த  டெல்லி தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மாநாட்டில்  பங்கேற்ற 275 வெளிநாட்டினர் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இவர்களில் ஈரான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களின் பாஸ்போர்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்த நிலையில், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மாநாட்டில் பங்கேற்ற வர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்ட நிலையில், அவர்களை தேடும் பணிகளை மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன. இதற்கிடையில் பலர் தாமாகவே முன்வந்து சோதனைக்கு உட்படுத்தியும், தனிமைப்படுத்துதலிலும் இருந்து வருகின்றனர்.

இநத் கூட்டத்தில் கலந்துகொண்ட டெல்லி நிஜாமுஹீன் தப்லிகி ஜமாத்தின் தலைவர் மவுலானா சாத்  உள்பட 5,000க்கும் மேற்பட்டோர்  தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இவர்களில் பலரது  நிலைமை ஆபத்தாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து,  நிஜாமுதீன்  கூட்டத்தில் பங்கேற்ற 275 வெளிநாட்டினரை போலீசார் இன்று அதிடியாக கைது செய்தனர். அவர்களில் 172 பேர் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

மேலும்,, கஜகஸ்தானை சேர்ந்த 36 பேர், வங்காளதேசத்தை சேர்ந்த 21பேர் என தெரியவந்தது.  அத்துடன், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த எட்டு வெளிநாட்டினர் இங்குள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார்  தெரிவித்துள்ளனர்.