ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் – உலக சுகாதார அமைப்பு

Must read

மும்பை:
ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 6,31,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 51,13,74,672 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் 46,46,75,111 பேர் மீண்டுள்ளனர். 62,52,925 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் மருத்துவமனைகளில் 40,446,636 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. 2,746 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓமிக்ரான் வைரஸ் மட்டுமே கடைசி கொரோனா இல்லை என்றும் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4வது அலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article