தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12518 ஆக உயர்வு…!

Must read

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12518 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை  சுகாதார துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, இன்று தமிழகத்தில் 567 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி உள்ளது.

இதன் மூலம், கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 855,121 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 567 பேர்களில் 251 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு ஒருவர் பலியாக ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 12518ஆக உயர்ந்துள்ளது. இன்று 521 பேர் கொரோனாவில் இருந்து குணமாக ஒட்டுமொத்த குணமானோர் எண்ணிக்கை 838,606 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 54841 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 175,29,190 என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

More articles

Latest article