தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில், 2,96,901 பேர் பாதிக்கப்பட்டுஉள்ளனர். ஒருபுறம் பாதிப்பு அதிகரித்தாலும், மற்றொரு புறம் பாதிப்பில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
முன்னதாக கொரோனா பொதுமுடக்கம் சமயத்தில், பொதுமக்களுக்கு சேவையாற்றிய பல தரப்பினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி அருகே உள்ள குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளான சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.