திருச்சி: மத்தியபொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்கு ஆள் எடுக்கும் பணியில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என பல ஆண்டுகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட 503 இடங்களுக்கான பணிகளுக்கு 4 தமிழர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

கொரோனா லாக்டவுன் காரணமாக, பெரும்பாலான வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்ற நிலையில், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு ஆள் எடுக்கும் பணி கடந்த வாரம் நடைபெற்றது.

இந்த பணியில்  வடமாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட சுமார் 500 பேர் பணி அமர்த்தப் பட்டுள்ளனர்.  இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரயில்வே பனிமனை யில் வேலை பெற ஏராள மான தமிழர்கள்   அப்ரன்டீஸ் முடித்து பணிக்காக காத்திருந்த நிலையில், வடமாநிலத்தவர்களுக்கு பணி வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா முடக்கம் காரணமாக, இன்றுவரை லாக்டவுன் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்போது, ​​பல்வேறு வட மாநிலங்களில் இருந்து சுமார் 500 வடமாநில இளைஞர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக வந்து கலந்துகொண்டனர். காலியாக இருந்த  503 பதவி களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 4 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக ரயில்வே  வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விவகாரத்தில், அவர்களுக்கு இ-பாஸ் கிடைத்தது எப்படி,  இ-பாஸ் வழங்கியவர்கள் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ள நிலையில்,  அவர்களின் இ-பாஸின் உண்மையான தன்மை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் வேலைக்கு வந்திருந்த தமிழக இளைஞர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

கொரோனா பொதுமுடக்க காலத்திலும், வட மாநில தொழிலாளர்கள் திருச்சியில்  குவிந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவே கடுமை யான சிரமங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையில், வடமாநிலத்தவர்கள் எப்படி திருச்சியில் குவிந்தனர் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அவர்களுக்கு இ-பாஸ் கிடைத்தது எப்படி என்றும் அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதுகுறித்து தகவ்ல அறிந்த உள்ளூர் இளைஞர்கள் மற்றும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தமிழ் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கட்சியினர் பொன்மலை ரயில்வே  பணிமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தெற்கு ரயில்வே பணிமனையில் பயிற்சி முடித்தவர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

கருப்புக் கொடியுடன் பேரணியாக வந்து திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக பொன்மலை பணிமனை முன்பு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

“மாநிலத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழக மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், மத்தியஅரசோ,  பொதுத்துறை நிறுவனத்தில் வட இந்திய இளைஞர்கள் வேண்டுமென்றே நிரப்பபி வருகின்றனர். இது எந்த விதத்தில் நியாயம் என்று தமிழக இளைஞர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இந்த விஷயத்தில், தமிழகஅரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்றும் வடமாநிலத்த வர்களின் இ-பாஸ் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதுடன், தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும்படி தமிழகஅரசுக்கும், தமிழக எம்.பி.க்களுக்கும் கோரிக்கை வைத்து உள்ளனர்.