சென்னை: கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக  சென்னையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறந்திருக்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இன்று முதல் முக்கவசமும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ளது.  இதையொட்டி, மீண்டும் பாதுகாப்பு நெறிமுறைகளை தீவிரப்படுத்தி உள்ளது தமிழக அரசு. ஏற்கனவே கொரோனா தொற்று பரவல் காரணமாக,  கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால், படிப்படியாக தளர்வகள் அறிவிக்கப்பட்டன.

ஆனால், தற்போது மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தப்பட்ட வருகிறது.  இதனால், சென்னையில் ஒரு தெருவில்  மூன்றுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று இருந்தாலே அது கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

மேலும், கொரோனா  விதி மீறலில் ஈடுபடும் பொதுமக்கள், கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேண்டுமென்றால் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என கூறியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று முதல் இரண்டு மாதம் வரை முககவசம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.

அதுபோல,  சென்னை முழுவதும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி காலை 8 மணி முதல் மாலை 3மணி வரை செயல்படும் மையங்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.