இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.04 கோடியை தாண்டியது

Must read

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,04,14,404 ஆக உயர்ந்து 1,50,606 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 18,094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,04,14,044 ஆகி உள்ளது.  நேற்று 233 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,50,606 ஆகி உள்ளது.  நேற்று 20,532 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,00,36,722 ஆகி உள்ளது.  தற்போது 2,22,416 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,729 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,58,282 ஆகி உள்ளது  நேற்று 72 பேர் உயிர் இழந்து மொத்தம் 49,897 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,350 பேர் குணமடைந்து மொத்தம் 18,56,109 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 51,111 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 761 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,24,898 ஆகி உள்ளது  இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,131 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 812 பேர் குணமடைந்து மொத்தம் 9,03,629 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 9,119 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 296 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,84,171 ஆகி உள்ளது  இதில் நேற்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,126 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 368 பேர் குணமடைந்து மொத்தம் 8,74,223 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,822 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 805 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,23,986 ஆகி உள்ளது  இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,200 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 911 பேர் குணமடைந்து மொத்தம் 8,04,239 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 7,547  பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,051 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,95,934 ஆகி உள்ளது.  இதில் நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,235 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,638 பேர் குணமடைந்து மொத்தம் 7,28,059 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 64,447 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

More articles

Latest article