டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,46,622 ஆக உயர்ந்து 6946 பேர் மரணம் அடைந்துள்ளனர்
நேற்று இந்தியாவில் 10,438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,36,622 ஆகி உள்ளது. நேற்று 297 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 6946 ஆகி உள்ளது. நேற்று 5490 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,18,695 ஆகி உள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,20,968 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 2739 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 82,968 ஆகி உள்ளது நேற்று 120 பேர் உயிர் இழந்து மொத்தம் 2969 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2243 பேர் குணமடைந்து மொத்தம் 37,390 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1478 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 30,172 ஆகி உள்ளது இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 633 பேர் குணமடைந்து மொத்தம் 16,395 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 1320 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,654 ஆகி உள்ளது. நேற்று 53 பேர் மரணம் அடைந்து இதுவரை மொத்தம் 761 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 349 பேர் குணமடைந்து மொத்தம் 10,664 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 498 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,617 ஆகி உள்ளது இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 1190 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 313 பேர் குணமடைந்து மொத்தம் 13,324 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 253 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,337 ஆகி உள்ளது இதில் நேற்று 23 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 231 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 142 பேர் குணமடைந்து மொத்தம் 7501 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் தற்போது அந்தமான் நிகோபார் தீவுகள் பகுதி மட்டும் கொரோனா பாதிப்பற்ற மாநிலமாக உள்ளது.