வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,26,715 உயர்ந்து 69,67,036 ஆகி இதுவரை4,01,623 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,26,715 பேர் அதிகரித்து மொத்தம் 69,67,036 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4177 அதிகரித்து மொத்தம் 4,01,623 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 34,07,822 பேர் குணம் அடைந்துள்ளனர். 53,587 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,836 பேர் அதிகரித்து மொத்தம் 19,88,544 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 706 அதிகரித்து மொத்தம் 1,12,096 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 7,51,695 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,581 பேர் அதிகரித்து மொத்தம் 6,73,587 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 910 அதிகரித்து மொத்தம் 35,957 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,02,084 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,855 பேர் அதிகரித்து மொத்தம் 4,58,689 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 197 அதிகரித்து மொத்தம் 5,725 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,21,388 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ஸ்பெயினில் நேற்று 332 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,88,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று ஒருவர் ஒருவர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 27,135 ஆக உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,438 பேர் அதிகரித்து மொத்தம் 2,46,622 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 297 அதிகரித்து மொத்தம் 6946 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,18,695 பேர் குணம் அடைந்துள்ளனர். உலக அளவில் இந்தியா ஆறாம் இடத்தை அடைந்துள்ளது.