டில்லி

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18601 ஆகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 590 பேராக அதிகரித்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது.   அதையொட்டி மத்திய அரசு தேசிய ஊரடங்கை மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.   ஆயினும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.   கடந்த 24 மணி நேரத்தில் 1336 பேர் புதியதாக பாதிப்பு அடைந்துள்ளதாகவும் 47 பேர் உயிர் இழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை மொத்தம் 18601 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்  உயிர் இழந்தோர் எண்ணிக்கை 590 ஆகி உள்ளது.  இதுவரை 3252 பேர் சிகிச்சை பெற்றுக் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.   இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் 4866 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது  இங்கு 232 பேர் உயிர் இழந்துள்ளனர்.  572 பேர் குணம் அடைந்துள்ளனர்.  அடுத்ததாக டில்லியில் 2081 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு 47 பேர் உயிர் இழந்து 431 பேர் குணமடைந்துள்ளனர்.    தமிழகம் இந்த வரிசையில் 5 ஆம் இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் 1520 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 17 பேர் உயிர் இழந்துள்ளனர்.  மொத்தம் 457 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்தியாவில் மாநிலம்வாரியாக விவரம் வருமாறு

அசாமில் 35 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 19 பேர் குணம்.
பிகாரில் 113 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 42 பேர் குணம்.
சண்டிகரில் 26 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 13 பேர் குணம்

சட்டிஸ்கரில் 36 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 25 பேர் குணம்.

கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணம்.
குஜராத்தில் 1939 பேருக்கு பாதிப்பு; 71 பேர் பலி; 131 பேர் குணம்.
அரியானாவில் 254 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 127 பேர் குணம்.
திரிபுராவில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணம்.
கேரளாவில் 408 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 291 பேர் குணம்.
ராஜஸ்தானில் 1576 பேருக்கு பாதிப்பு; 25 பேர் பலி; 205 பேர் குணம்.
ஜார்கண்டில் 46 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 0 பேர் குணம்.
லடாக்கில் 18 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 14 பேர் குணம்.

மணிப்பூரில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணம்.
மேகலாயாவில் 11 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 0 பேர் குணம்.
மிஸரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணம்.
ஒடிசாவில் 74 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 24 பேர் குணம்.
பாணடிச்சேரி 7 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 3 பேர் குணம்.
நாகாலாந்தில் 0 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணம்.
ஜம்மு காஷ்மீரில் 368 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 71 பேர் குணம்.
கர்நாடகாவில் 408 பேருக்கு பாதிப்பு; 16 பேர் பலி; 112 பேர் குணம்.
பாஞ்சாப்பில் 245 பேருக்கு பாதிப்பு; 16 பேர் பலி; 38 பேர் குணம்.
தெலுங்கானாவில் 844 பேருக்கு பாதிப்பு; 18 பேர் பலி; 186 பேர் குணம்.
உத்தரகண்ட்டில் 46 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 18 பேர் குணம்.
மேற்கு வங்கத்தில் 392 பேருக்கு பாதிப்பு; 12 பேர் பலி; 73 பேர் குணம்.
ஆந்திரப்பிரதேசத்தில் 722 பேருக்கு பாதிப்பு; 20 பேர் பலி; 92 பேர் குணம்.
மத்தியப்பிரதேசத்தில் 1485 பேருக்கு பாதிப்பு; 74 பேர் பலி; 127 பேர் குணம்.
உத்தரப்பிரதேசத்தில் 1184 பேருக்கு பாதிப்பு; 18 பேர் பலி; 140 பேர் குணம்.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணம்.
இமாச்சலப்பிரதேசத்தில் 39 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 16 பேர் குணம்.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 16 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 11 பேர் குணம்.