ராஞ்சி-

ஜார்கண்ட் மாநிலத்தில் ஹோலிபண்டிகை நாளில் மேல்சாதிக்காரர் மீது கலர்பொடி தூவிய தலித்தை அடித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

கோடர்மா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில்தான் இச்சம்பவம் நடந்த து. ஹோலி பண்டிகை தினத்தன்று அந்தக்கிராமத்திலிருக்கும் எல்லோரையும் போல்தான் பிரதீப் சவுத்ரி என்பவரும் பிறர் மீது கலர்பொடி தூவி உற்சாகமாக கொண்டாடினார்.  அப்போது அவரது கலர்பொடி சவுகிதார் ராஜேந்தர் யாதவ் என்ற மேல்சாதிக்கார ர் மீது பட்டுள்ளது.

உடனே அந்த மேல் சாதிக் கார ருக்கு  கோபம் வந்து விட்டது. போலீசாரை அழைத்து பிரதீப் சவுத்ரிக்கு பாடம் கற்பியுங்கள் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து போலீசார், பிரதீப் சவுத்ரியின் வீட்டுக்கு வந்து அவரை பயங்கரமாக அடித்துள்ளனர். இதனால் அவர்  மயக்கமடைந்தார். அதன்பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்குத் தூக்கிச் சென்றதாக பிரதீப் சவுத்ரியின் மனைவி ஜஸ்வா தேவி தெரிவித்தார்.

போலீஸ் நிலையத்துக்குள் தங்களை அனுமதிக்கவில்லை என்று கூறிய ஜஸ்வா தேவி, மறுநாள் காலையில் போலீசார் பலத்த காயங்களுடன் இருந்த தனது கணவரை தூக்கிக் கொண்டு வீட்டில் போட்டுவிட்டுச் சென்றதாக கூறினார்.

அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என ராஞ்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டதாக பிரதீப் சவுத்ரியின் மனைவி கவலையுடன் தெரிவித்தார்.

எல்லா ஊரிலும் உள்ள போலீசார் ஒரேமாதிரி இருப்பது ஆச்சரியமாக உள்ளது.