கல்கத்தா,

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணனுக்கு ஜாமின் வெளிவரும் வகையில் பிடியாணை பிறப்பித்தது.

மேலும்,  மேற்குவங்க மாநில காவல் துறைத் தலைவர் அந்த வாரண்டை கர்ணனிடம் அளித்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மார்ச் 31-ம் தேதி ஆஜராக நடவடிக்கை எடுக்கு மாறு உத்தரவிட்டது.

இது மேலும் பரபரப்பை உருவாக்கியது. பதவியில் உள்ள ஒரு உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக இவ்வாறு கைது வாரண்ட் பிறப்பிக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், தனக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்காக,  ரூ.14 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்று உச்சநீதி மன்ற பெஞ்சுக்கு நீதிபதி கர்ணன் பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார்.

இந்நிலையில், கல்கத்தாவில் உள்ள நீதிபதி கர்ணன் வீடு முன்பு நூற்றுக்கணக்கான போலீசார் திடீரென குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடன் போலீஸ் அதிகாரியும் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கல்கத்தா நீதிபதியாக இருக்கும் கர்ணனிடம்  சுப்ரீம் கோர்ட்டு அளித்த வாரண்டு கொடுக்கப்படும் என தெரிகிறது, இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.