நியூயார்க்:
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவை வென்று கோப்பையைக் கைப்பற்றியது சிலி அணி.
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம்  நியூயார்க் நகரில் நடைபெற்றது. நடப்பு சாம்பியனான சிலியும், ஆர்ஜென்டீனாவும் மோதின.
chile
கடந்த 23 ஆண்டுகளாக எந்தவொரு பெரிய போட்டியிலும் கோப்பையை வெல்லாத ஆர்ஜென்டினா இந்த முறை கோப்பையை வெல்லுமா, கடந்த முறை சிலியிடம் அடைந்த  தோல்விக்கு பதிலடி தருமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச கால்பந்து ரசிகர்களிடையே இருந்தது.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில்  ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆகவே வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில், 4-2 என்ற கோல் கணக்கில் சிலி அணி, கோப்பையை வென்றது.
அர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸி தனக்குக் கிடைத்த வாய்ப்பை வீணடித்தார். அது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற கோபா அமெரிக்கா போட்டியின் இறுதிச்சுற்றிலும் இந்த இரண்டு அணிகள்தான் மோதின. அதிலும் பெனால்டி ஷூட் அவுட் முறையில் சிலி அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.