சென்னை:
லவித புகார்களுக்கு ஆளாகியிருக்கும் சர்ச்சை சாமியார் ஜக்கி வாசுதேவ் நடத்தும் விழாவில், மத்திய அமைச்சர் மற்றும் பாண்டி கவர்னர் கலந்துகொள்ள இருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
கோவை அருகே வெள்ளியங்கிரி மலையில் ஈசா  என்ற பெயரில் யோகா மையம் நடத்தி வருகிறார் சர்ச்சை சாமியார் ஜக்கி வாசுதேவ். இவர் மீது,  சட்டத்துக்குப் புறம்பாக காடுகளை அழித்து கட்டிடங்கள் கட்டுதல், அனுமதி இன்றி பள்ளி நடத்துதல் போன்ற புகார்கள் நீண்ட நாட்களாக உள்ளன. மேலும், பெண்களை வசியப்படுத்தி தனது மையத்தில் வைத்திருப்பதாகவும் பள்ளி மாணவர்களை கொடுமைப்படுத்தியதாகவும் அவர்களது பெற்றோர்கள் புகார்கள் தெரிவித்துள்ளனர்.
 
a
இந்த நிலையில்  நாளை மறுநாள், கோவை கொடீசியா மைதானத்தில் பெரும் விழா ஒன்றை நடத்துகிறார் ஜக்கி வாசுதேவ். “ஈசா கிராமோத்சவம்”  என்ற பெயரில் நடக்கும் இந்த விழாவில்  மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர்  ராஜ்யவர்தன் ரதோர், பாண்டிச்சேரி மாநில கவர்னர் கிரன்பேடி ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
சட்டத்துக்குப் புறம்பாக கட்டிடங்கள் கட்டி செயல்படும் ஈசா மையம் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில் மத்திய அமைச்சரும், மாநில முதல்வரும் கலந்துகொள்ளவது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
“ஜக்கி மீது பலரும் புகார் கூறி வரும் நிலையில் முக்கிய பதவிியல் இருக்கும் செல்வாக்கு படைத்தவர்கள் கலந்துகொள்வது, புகார் தெரிவித்தரவர்களை மறைமுகமாக அச்சுறுத்தும். இதுபோல சர்ச்சையில் சிக்கியவர்கள் விழாவில், மக்கள் பிரதிநிதிகளோ, அரசு பொறுப்பில் இருப்பவர்களோ கலந்துகொள்வதை  தவிர்க்க வேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.