சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்புக்கு நடந்த ஆங்கில தேர்வில் இடம்பெற்ற கேள்வி சர்ச்சையை எழுப்பியுள்ளது.

பெண்கள் சுதந்திரம் பெறுவது பலவிதமான சமூக மற்றும் குடும்ப பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்று குறிப்பிடும் ஒரு கட்டுரையை வெளியிட்டு அதன் அடிப்படையில் சில கேள்விகளையும் கேட்டிருக்கிறது.

அதில், வீட்டில் குழந்தைகள் மற்றும் வேலையாட்களிடம் ஒழுக்கம் குறைய பெண்கள் சுதந்திரம் தான் காரணம்.

மனைவிகள் தங்கள் கணவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பதை நிறுத்திவிட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

நல்ல குடும்ப அமைப்பில் குழந்தைகள் மற்றும் வேலையாட்களுக்கு அவரவருக்கு உண்டான இடம் உணர்த்தப்படும் என்று கூறியிருப்பதுடன், இளைஞர்கள் தங்கள் சொந்த உலகில் வாழ்வதே ஒழுக்ககேடுக்கு காரணமாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறது.

இந்த கேள்வித்தாள் குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு கேள்வித்தாளில் இடம்பெற்றுள்ள இந்த சர்ச்சைக்குரிய கட்டுரை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பப்படும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.