சென்னை: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்தியஅரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்  என்றும்,  மாதம் ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக் டன் கோதுமை, துவரம் பருப்பை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதுடன்,  உணவுப் பொருள் பணவீக்கத்தில் காணப்படும் கவலைக்குரிய நிலை குறித்து ஒன்றிய அரசின் கவனத்துக்கு கொண்டு வர விழைகிறேன் என்று முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  மேலும், கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் இந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால்  விலை கட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.