ந்தியாவிலேயே அதிகமழை பொழியும் இடம் சிரபுரஞ்சி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி என்ற சுற்றுப் பிரதேசத்தி பெய்துவரும் தொடர்மழை சிரபுஞ்சியை மிஞ்சி உள்ளது.

மேகாலயா மாநிலத்தில் உள்ள சிரபுஞ்சியில் ஆண்டுக்கு, சராசரியாக, 11 ஆயிரத்து 619 மி.மீ. மழை பெய்வதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ள துடன்,  ஆசியாவில் அதிக மழை பெறும் பகுதியாகவும் கருதப்படுகிறது..

பொதுவாக  தென்மேற்கு பருவமழை காலங்களில் மழைப் பெய்யக் கூடிய இடம்தான் அவலாஞ்சி. அதனால் இந்த முறையும் அங்கு மழை பெய்யும் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால், கடந்த சில நாட்களாக அவலாஞ்சியில் பெய்து வரும் மழையி அளவை கணக்கிடும் போது, இது சிரபுஞ்சியை மிஞ்சி விடும் அளவுக்கு வெளுத்து வாங்கி வருகிறது.

கடந்த வியாழக்கிழமை காலை 8 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குட்பட்ட அதாவது இந்த ஒருநாளில் மட்டும், 91 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த அளவுதான், 100 ஆண்டுகளில் பதிவான அதிக மழை மட்டுமின்றி, தென்னிந்தியாவிலேயே இதுதான் அதிக மழைப்பதிவு.

இதன் காரணமாக உலக மக்கள் மட்டுமின்றி, உலக வாணிலையாளர்களின்  கண்களை தன்னை நோக்கி திருப்பி உள்ளது அவலாஞ்சி. அவலாஞ்சியின் ஒவ்வொரு மாற்றமும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  820 மி.மீ. அளவுக்கு மழை பொழிந்த நிலையில், நேற்று முன்தினம்  911 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.  72 மணி நேரத்தில் அங்கு பதிவான மழை 2136 மி.மீ அளவுக்கு மாமழை பொழிந்துள்ளது.

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு அவலாஞ்சி நீர் மின் நிலையம் அருகே 2 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் மின் வாரியத்தில் வேலை பார்த்து வந்த ஊழியர்கள் சிக்கிக் கொண்டார்கள். இவர்கள் ஹெலிகாப்டரில் வந்த மீட்பு படையினர் மூலம் மீட்கப்பட்டு உள்ளனர்.  அங்கு மக்களுக்கு உதவும் வகையில், மாவட்ட நிர்வாகமும், பேரிடர் படையும் தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில்  அவலாஞ்சி மழை குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்து உள்ளார்.

அவலாஞ்சியில் அதி வேகமாகக் காற்று வீசிக் கொண்டு இருந்ததால் அங்கு கன மழை பெய்து உள்ளது. இதுவரை தமிழகத்தில் ஒரே நாளில் 82 செ.மீ. மழை பதிவானது இதுவே முதல் முறை. அது பற்றி நேரில் சென்று ஆய்வு செய்யப்பட உள்ளது. இதற்கு அடுத்தபடியாக மேல் பவானியில் 24 செ.மீ.மழையும், சின்னக் கல்லார் பகுதியில் 23 செ.மீ. மழையும் பதிவாகியிருந்தது. என்றும் தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து பேசியவர்,  தென்மேற்குப் பருவ மழை வலுவாக இருப்பதால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்ப தாகவும், தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு  இருப்பதாகவும் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறி உள்ளார்.

அந்தமான் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால்,  அடுத்த 3 நாட்களுக்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.