கொரோனா நிவாரணப் பணிகளுக்காக, தங்கள் பங்குக்கு உதவிகளை அறிவித்துள்ளனர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அணிகள்.

நரேந்திர மோடி அரசின் மோசமான நிர்வாகம் மற்றும் அலட்சியத்தால், இந்தியாவில், கொரோனாவின் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது.

இந்நிலையில், ஐபிஎல் வீரர்கள் பலரும், அணிகளும் தற்போது உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். முதன்முதலில் இதை துவக்கி வைத்தவர் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ். இவர், கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ளார். அவர், ரூ.29 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார்.

பின்னர், ராஜஸ்தான் அணி நிர்வாகம், ரூ.7.5 கோடி நிவாரணமாக அறிவித்தது. பின்னர், டெல்லி அணி நிர்வாகம் ரூ.1.20 கோடி நிவாரணம் அறிவித்தது. பஞ்சாப் அணி நிர்வாகமும் உதவிகளை அறிவித்துள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் வீரர் நிக்கோலஸ் பூரான் தன் ஊதியத்தில் ஒரு பாதியை நிவாரணத்திற்கு அறிவித்துள்ளார். ராஜஸ்தான் அணியில் இடம்பெற்ற ஜெயதேவ் உனத்கத், தனது ஐபிஎல் ஊதியத்தில் 10% ஐ கொரோனா நிவாரணத்திற்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தற்போது, கிரிக்கெட் உலகிலிருந்து, கடல் கடந்தும் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஊடக அமைப்பின் சார்பில் ரூ.2.21 லட்சம் உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.