பாட்னா: பீகார் மாநிலத்தின் தலைமைச் செயலாளர் கொரோனாவால் மரணமடைந்துள்ளது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் தலைமைச் செயலாளராக இருந்தவர் அருண்குமார் சிங். இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, கடந்த பல நாட்களாக மருத்துவமனை சிகிச்சையில் இருந்துவந்தார்.

இவர், முதலில் பாட்னாவிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்தான் சேர்க்கப்பட்டார். ஆனால், உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, அங்கிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், நிலைமை மேலும் மோசமாகி, இன்று அவரின் உயிர் பிரிந்தது.

இவர், கடந்த 1985வது பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். ஏற்கனவே, பீகார் தலைமைச் செயலாளராக இருந்த தீபக் குமார் ஓய்வுபெற்றதையடுத்து, கடந்த பிப்ரவரி 28ம் தேதிதான், இவர் பீகாரின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.