தொடரும் கிடுக்கிப்பிடி விசாரணை: டி.டி.வி. தினகரன் இன்றும் ஆஜராக உத்தரவு!

Must read

டில்லி,

ரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயற்சி செய்த வழக்கின் காரணமாக டில்லி போலீசார் டிடிவி தினகரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று 4வது நாட்களாக தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக டில்லி போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.

ஜெ. மறைவை தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக உடைந்தது. இதன் காரணமாக அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டைஇலையை தேர்தல் ஆணையம் முடக்கியது.

இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இரட்டை இலையை தனது அணிக்கு ஒதுக்க இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக , கைது செய்யப்பட்ட சுகேஷ் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து டிடிவி தினரகன்மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராக டில்லி போலீசார் டிடிவி தினகரனிடம் நேரில் சம்மன் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து, கடந்த  சனியன்று விசாரணைக்காக டில்லிக்குச் சென்றார் தினகரன். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்களைக் கடந்து இன்று 4வது நாளாக தொடர இருக்கிறது.

நேற்று  சுமார் 9 மணி நேரம் விசாரித்த போலீஸார், இன்று மாலை மீண்டும்  விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு ஆஜராக இருக்கிறார்.

More articles

Latest article