மும்பை

ஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற ரூ.13400 கோடி முறைகேடு வழக்கில் சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை பதிவு செய்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் உறுதிக் கடிதம் பெற்று ரூ.13400 கோடி மோசடி நடைபெற்றதாக சிபிஐ வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது.   அந்த விசாரணை முடிவில் இரு குற்றப்பத்திரிகை பதிவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.   அதில் முதல் குற்றப்பத்திரிகையை இன்று சிபிஐ பதிவு செய்தது.    ஏற்கனவே இந்த வழக்கில் சிபிஐ மூன்று தகவல் அறிக்கைகள் பதிவு செய்தது தெரிந்ததே.

இந்த முதல் குற்றப்பத்திரிகையில் 25 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான நிரவ் மோடி, மற்றும் அவர் உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக குறிப்பிடப் பட்டுள்ளனர்.  மற்றும் அலகாபாத் வங்கியின் நிர்வாக இயக்குனர் உஷா அனந்தசுப்ரமணியன், பஞ்சாப் வங்கியின் பிரமாஜி ராஒ, சஞ்சீவ் சரன், நெகல் அகாத், மற்றும் மோடியின் மூன்று நிறுவனங்கள் உள்ளிட்டவர்களும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

விரைவில் அடுத்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் போது அதில் மெகுல் சோக்சி சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.