சென்னை:

டிகர் சங்க தேர்தல் பிரச்சினை நீதிபதியின் தீர்ப்பில் தலையிட முயன்றதாக  ஐசரி கணேஷ் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவருக்கு  ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

நடிகர் சங்கத் தேர்தல்  தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்த வழக்கை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வந்த நிலையில், விஷானின் மனுமீது விசாரிக்க வேண்டாம் என்று வழக்கின் தீர்ப்பில் தலையீடு செய்ய முயன்றதாக ஐசரி கணேஷ் மீது நீதிபதியே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விரிவான விளக்கமும் தெரிவித்திருந்த நிலையில், வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வழக்கின் இன்றைய விசாரணையின்போது, நீதிமன்றத்தில் ஆஜரான ஐசரி கணேஷ், நிபந்தனை யற்ற மன்னிப்பு கோரினார். இதைத்தொடர்ந்து,  ஐசரி கணேசிற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட ஐசரி கணேஷ், தனது தவறுக்காக ரூ.10 லட்சத்தை அபராதமாக செலுத்துகிறேன் என  ஒப்புக்கொண்டார். இதையடுத்து, சட்டப்பணிகள் குழு ஆணையக்குழுவில் ரூ.10 லட்சத்தை செலுத்த ஐசரி கணேஷ்கு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.