ரவுடி குணாவுடன் தொடர்பு: காஞ்சியில் 40 காவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம்….

Must read

காஞ்சிபுரம்: 42 வழக்குகள் உள்ள பிரபல ரவுடி குணாவுக்கு உதவி செய்தாக காஞ்சிபுரம் மாவட்டத்தில்40 காவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன்.  இவர் மீது ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவதுஇ சமூக விரோத செயல்களில் ஈடுபட்டது, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆபகுதிகளில்  நிலுவையில் உள்ளது.

இதையடுத்து, ரவுடி குணாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஆனால், அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை என்கவுண்டர் செய்யும் வகையில், பிரபல என்கவுன்டர் ஸ்பெஷலிட் வெள்ளைத்துரையும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணி அமர்த்தப்பட்டு உள்ளார்.  இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரவிடி மனைவி எல்லம்மாளை எஸ்.பி வெள்ளத்துரை தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்தனர்.

இதையடுத்து ரவுடி குணாவின் மனைவி சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவரது மனுவில், ‘தனது கணவரைக் காவல்துறையினர் என்கவுன்டர் செய்யக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். குணாவை என்கவுன்டர் செய்யும் திட்டம் இல்லை, அவர் சரணடையும் பட்சத்தில் விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார் என காவல்துறை உறுதி அளித்தது.

இந்த நிலையில், படப்பை குணாவுக்கு பல வழிகளில் உதவி செய்ததாக 8 காவலர்கள், 10 முதன்மை காவலர்கள், 15 தலைமை காவலர்கள், 4 உதவி ஆய்வாளர்கள், 3 காவல் ஆய்வாளர்கள் என 40 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. பணியிடம் செய்யப்பட்ட 40 பேர்களும் சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

 

 

More articles

Latest article