டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமானதை அடுத்து அங்கு கட்டுமான பணிகளுக்கு டெல்லி மாநில அரசு தடைவிதித்துள்ளது. டெல்லியில் மோசமான மாசு அளவுகளுக்கு மத்தியில், மத்திய அரசின் காற்றுத் தரக் குழு சனிக்கிழமையன்று தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகளுக்கு கட்டுமான நடவடிக்கைகளுக்கு தடை போன்ற கட்டுப்பாடுகளை அமல்படுத்த உத்தரவிட்டது.
இந்தியாவில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியை சுற்றி உள்ள ஆலைகளால் வெளியேறும் மாசு மற்றும் வைக்கோல் போன்ற தானியங்களை எரிப்பதால் உருவாகும் மாசு காரணமாக, தலைநகர் டெல்லியில் மக்கள் சுவாசிக்க முடியாத அளவுக்கு மாசு அதிகரித்து வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா கால கட்டத்தில் கட்டுபாட்டில் இருந்த காற்று மாசு, இந்த தீபாவளிக்கு பிறகு மீண்டும் அதிகரித்துள்ளது.
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பை தடக்க கடந்த 5ஆண்டுகளாகவே டெல்லியில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க தடை நீடித்து வருகிறது. இருந்தாலும், பலர் தடையை மீறி பலர் தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். இதனால், டெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரித்த உள்ளது. டெல்லியின் காற்றின் தரக் குறியீடு தொடர்ந்து 350 அதாவது ‘மிகவும் மோசம்’என்கிற அளவிலேயே இருந்து வந்தது. டெல்லி பல்கலைக்கழக பகுதியில் 355ஆக இருந்த நிலையில், இன்று 372ஆக உயர்ந்திருக்கிறது. இதனால் மக்கள் சுவாதிக்கவே சங்கடப்படுகின்றனர். காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமானப் பணி மற்றும் தேச நலனுக்கான அத்தியாவசிய கட்டிட பணிகள் தவிர்த்து பிற கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும், ராஜஸ்தானில் செயல்பட்டு வரும் 45 நிலக்கரி சார்ந்த தொழில் ஆலைகளை மூடும்படி காற்றின் தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல, டெல்லியின் அண்டை மாநிலங்களான அரியானாவில் 17, உத்தரபிரதேசத்தில் 63 ஆலைகள் மூடப்பட்டுள்ளன.