நெட்டிசன்:

குன்றது முருகராஜ் முகநூல் பதிவு

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் மோர்பில் விபத்தில் சிக்கிய ஜூல்டா பாலம் மிகவும் பழமையானது.  சுதந்திரத்திற்கு முன்பு 1887ம் ஆண்டு அப்போதைய போர்பின் மன்னரான வாஜி ரவாஜி தாக்கூர் என்பவரால் கட்டப்பட்டது.

மச்சு ஆற்றின் மீது உள்ள இந்த பாலம் மோர்பி மக்களுக்கு ஒரு முக்கிய சுற்றுலா தலமாக இருந்தது. மோர்பியின் ஆட்சியாளர்களின்காலத்தல் கட்டப்பட்ட இந்த பாலத்தின் சிறப்பு என்னவென்றால், இது கட்டப்பட்டபோது, ஐரோப்பாவில் இருந்த அதிநவீன தொழில்நுட்பம் இந்த கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இந்தப் பாலம் நல்ல பொறியியலின் அடையாளமாக இருந்தது. இது கடந்த பல ஆண்டுகளாக அவ்வப்போது சீரமைக்கப்பட்டு வந்தது.

தீபாவளியன்று பாலம் திறக்கப்படுவதற்கு முன்,  7 மாதங்கள் பழுது பார்ப்பதற்காக மூடப்பட்டது. இந்த பாலம் திறக்கப்பட்டபின், ஏராளமான மக்கள் இந்த உல்லாச பாலத்தை அடைந்தனர். அப்போதுதான் இந்த  ஏற்பட்டது. இந்த பாலத்த சீரமைக்க ரூ.2 கோடி செலவிடப்பட்டது.

மோர்பியில் நேற்று கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 132 பேர் உயிரிழந்த நிலையில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.