குர்தாஸ்பூர்

ஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் இடைத் தேர்தலில் காங்கிரஸ்  1.9 லட்சத்துக்கு மேல் வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் நாடாளுமன்ற தொகுதிய்ல் கடந்த 11ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றாது.  பிரபலநடிகரும்,  பா ஜ க வை சேர்ந்தவருமான வினோத் கன்னா இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.   அவருடைய மறைவினால் காலியான இந்த 9 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியதுமான இந்தத் தொகுதியில் மொத்தம் 11 வேட்பாளர்கள் களம் இறங்கினர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே பஞ்சாப் மாநில ஆளும் கட்சியான காங்கிரச் கட்சியை சேர்ந்த சுனில் ஜாகர் முன்னணியில் இருந்தார்.  வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் இவர் 1,93,219 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார்.  இதனால் மகிழ்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் இனிப்புக்கள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.