டில்லி

டந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் எனக் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது.  இதில் பஞ்சாபில் ஆளும் கட்சியாக  இருந்த காங்கிரஸ் கட்சி ஆம் அத்மி கட்சியிடம் அட்சியை இடந்துள்ளது.  பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 90 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இம்மாநில முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பகவந்த் மன் சுமார் 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.   ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   இது குறித்து காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலாவிடம் செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினர்.

ச்ர்ஜித்வாலா,

“நடந்து முடிந்த  தேர்தலில் மக்கள் மன்றம் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறது. 5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இல்லை என்பது உண்மைதான். குறிப்பாக கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலங்களில் காங்கிரஸுக்கு வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம்.

இந்த 3 மாநில மக்களின் நம்பிக்கையைக் காங்கிரஸ் கட்சி பெறவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். பஞ்சாப் மாநிலத்தில் அமரீந்தர் சிங் ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருந்த அதிருப்தியால் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது.   மக்கள் ஆட்சி மாற்றத்துக்காக வாக்களித்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்

காங்கிரஸ் கட்சி உத்தரப்பிரதேசத்தில் புத்துயிரூட்டப்பட்டு உள்ள போதிலும் கூடுதல் தொகுதிகளைக் கைப்பற்ற முடியவில்லை.  மேலும் உத்தரகாண்ட் மற்றும் கோவாவில் தீவிரமாக பணியாற்றியும் வெற்றி பெறவில்லை என்று காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொள்கிறது. தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, மக்களுடன் இணைந்து முழுமையாகப் பாடுவோம் என்று காங்கிரஸ் உறுதியாக உள்ளது   இந்த முடிவுகள் குறித்து ஆய்வு நடத்தப்படும்”

எனத் தெரிவித்துள்ளார்.