சென்னை:
ஞ்சாப் கல்வி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் சொத்துகளை பாதுகாக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் விஜய் இந்தர் சிங்கிளா விடம் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சொத்துகளை ஒழுங்குபடுத்துமாறு காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வந்த சிங்கிலா பங்கேற்ற முதல் கூட்டத்தில் சொத்துகள் பாதுகாப்பு கமிட்டியை சேர்ந்த 11 பேர் கொண்ட பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சொத்துகளை ஒழுங்குபடுத்தும் பணிக்காகவே இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இந்த பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆவணங்களை பார்த்து, வரி பாக்கி எதுவும் இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், எங்கள் கமிட்டி, தமிழக்த்தில் உள்ள சொத்துகளின் நிலையை அறிந்து கொண்டு அதில் ஏதாவது ஆக்கிரமிப்புகள் உள்ளதா என்றும் பார்ப்போம். இதுமட்டுமின்றி அனைத்து சொத்துகளையும் சேர்த்து பட்டியல் தயாரிக்கும் பணிகளிலும் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னர் பேசிய அவர், இந்த சொத்து பாதுகாப்பு கமிட்டி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆறு மாதமாக பயணம் மேற்கொண்டு இதுவரை 137 சொத்துகளை பட்டியலிட்டு அவற்றின் மதிப்பு 689 கோடி ரூபாய் என்றும் கணக்கிட்டுள்ளனர். இது அறிக்கையை தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் சிங்கிலா தெரிவித்துள்ளார்.