புதுடெல்லி:
த்ராஸ் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் 26ல் தேசிய அளவிலான போராட்டம் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக காங்கிரஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில், தலித் சமூகத்தைச் சேர்ந்த, 19 வயது இளம்பெண்ணை, நான்கு பேர் கடத்திச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். படுகாயங்களுடன் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த செப்டம்பர் 29ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இரவோடு இரவாக அந்த பெண்ணின் உடல், ஹத்ராசுக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு, அதிகாலை, 2:30 மணிக்கு, உடல் தகனம் செய்யப்பட்டது. உடலை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்று, போலீசார் தகனம் செய்ததாக அப்பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி காங்கிரஸ் சார்பில் 26ல் தேசிய அளவிலான போராட்டம் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாய சட்டத்திற்கு எதிராக மாவட்ட தலை நகரங்களில் வரும் 31ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் காங்கிரஸ் சார்பில் அறிவிகப்பத்டுள்ளது.