Skip to content
  • Tue. Jul 14th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி! முன்னாள் முதல்வர் சித்தராமையா

Oct 1, 2020

பெங்களூரு: தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள காலியாக உள்ள கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான  சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் 2 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. அந்த தொகுதிகளுக்கு  நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி,   காலியாக உள்ள சிரா, ராஜராஜேஸ்வரி நகர்  தொகுதிகளில் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, இரு சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்றும்,எஉ சிரா தொகுதியில் எங்கள் கட்சி சார்பில் முன்னாள் மந்திரி ஜெயச்சந்திரா போட்டியிடுவார் என்றும் கூறினார்.
மேலும், இடைத்தேர்தலில்,  ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம், காங்கிரஸ் கட்சி தனியாக நின்றே வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் கட்சிக்கு மாநிலத்தில் நல்ல செல்வாக்கும், பலமும் உள்ளது, அதுபோல  கட்சியில் வேட்பாளர்களுக்கு பஞ்சமில்லை.  எனவே, இணைந்து  ஒற்றுமையாக தேர்தலை எதிர்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Post navigation

நிதீஷ்குமாருடன் நடிகர் சுஷாந்தின் தந்தை திடீர் சந்திப்பு..
ஹத்ராஸ் வழக்கை கையிலெடுக்கும், நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை வாங்கிக்கொடுத்த வழக்கறிஞர் சீமா குஷ்வாஹா…

Related Post

இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

இந்தியா

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை தொடர்பாக பீகார் மற்றும் உ.பி.யில் 3 பேர் கைது

இந்தியா

மே 9-ல் மேற்கு வங்கம், மே 12-ம் தேதி அசாம் மாநிலங்களில் பாஜக அமைச்சரவை பதவியேற்பு விழா:

உலகம்

உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது; ஈரான் கூற்றை மறுத்த டிரம்ப்

July 13, 2026 Sundar
உலகம்

பாங்காக் பப் தீ விபத்து: 27 பேர் உயிரிழப்பு, 22 பேர் கவலைக்கிடம்

July 13, 2026 Sundar
உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer