சென்னை: நடிகர் சூர்யாவுக்கு காங்கிரஸ் துணை நிற்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆதரவு தெரிவித்து உள்ளர்.
நீட் தேர்வு தற்கொலை குறித்து நடிகர் சூர்யா கூறிய கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் நீதிமன்றங்கள் குறித்து கூறியது, நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படுகிறது. இதனால் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருபுறமும், நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று மற்றொரு புறமும், காரசாரமாக பேசி வருகின்றனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், நடிகர் சூர்யா மீது நடத்தப்படும் தாக்குதல் உள்நோக்கம் கொண்டது என்று கூறியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, நடிகர் சூர்யா குறி வைக்கப்பட்டால், அவருக்கு காங்கிரஸ் துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.