காங்கிரஸ் வெளியிட்டுள்ள பாஜகவின் எ டு இசட் ஊழல் பட்டியல்

 

டில்லி

காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் ஏ முதல் இசட் வரையிலான பாஜகவின் ஊழல் பட்டியலை வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் ஊழல் இருந்ததாக பிரதமர் மோடி ஓவ்வொரு கூட்டத்திலும் பேசி வருகிறார்.  முந்தைய காங்கிரஸ் அரசின் ஒவ்வொரு தலைவரை பற்றியும் தனது கூட்டங்களில் ஊழல் புகார் கூறி வருகிறார்.   இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சி பாஜகவின் ஊழல் பட்டியல் ஒன்றை தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்பட பட்டியலில் ஏ முதல் இசட் வரை ஓவ்வொரு எழுத்துக்கும் ஒரு ஊழல் பட்டியலில் தரப்பட்டுள்ளது.  உதாரணமாக ஏ என்பதர்கு அதானி எரிசக்தி ஊழல், பி என்னும் இடத்தில் பாக்கோ ஊழல் என குறிப்பிட்ப்பட்டுள்ளது.

மேலும் ”இத்தனை ஊழல்கள் பாஜகவினர் செய்துள்ள போதிலும் பிரதமர் மோடி  வாய் திறக்காமல் இருப்பது ஏன்?  காங்கிரஸ் தலைவர்கள் பற்றி ஊழல் புகார் கூறும் மோடி இது குறித்து அளிக்கப் போகும் பதில் என்ன?” எனக் கேள்விகள் எழுப்பி உள்ளது.

Tags: Congress released list of BJP Scam from A to Z