டில்லி

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி 3 பகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை அனைத்து கட்சிகளும் செய்து வருகின்றன.  எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து இந்தியா என்னும் கூட்டணியை அமைத்து பாஜகவை இந்த தேர்தலில் தோற்கடிக்க வியூகம் செய்து வருகின்றன.

இந்த கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சி 3 பகுதிகளுக்கு  தேர்தல் பார்வையாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் காணப்படுவதாவது

பகுதி 1

தெலுங்கானா, கர்நாடகா, தமிழகம், கேரளா, லட்சத்தீவுகள், புதுச்சேரி

தலைவர்

திரு ஹரீஷ் சவுத்ரி

உறுப்பினர்கள்

திரு விஸ்வஜித் கதம்

திரு ஜிக்னேஷ் மேவானி

பகுதி 2

ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, ஒடிசா, அந்தமான நிகோபார் தீவுகள்

தலைவர்

திரு மதுசூதன் மிஸ்ரி

உறுப்பினர்கள்

திரு சூரஜ் ஹெக்டே

திரு ஷஃபி  பரம்பில்

பகுதி 3

குஜராத்,, மத்தியப் பிரதேசம், சண்டிகர், ராஜஸ்தான், டில்லி, டாமன் மற்றும் டையூ,, தாதர் நாகர் ஹவேலி 

தலைவர்

திருமதி ரஜினி பாட்டில்

உறுப்பினர்கள்

திரு க்ரிஷ்ணா அல்லாவரு

திரு பர்கத் சிங்

என அறிவிக்கப்பட்டுள்ளது.