டில்லி

டும் எதிர்ப்பை சந்தித்துள்ள மத்திய அரசின் விவசாய சட்டத்தில் இருந்து விவசாயிகளைக் காக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முயற்சி செய்து வருகிறார்.

பாஜக அரசு கொண்டு வந்த விவசாய மசோதாக்களுக்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாஜக அரசு எதிர்ப்புக்களை மீறி விவாதம் ஏதும் நடத்தாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியது.  இதையொட்டி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.  அதையும் பாஜக அரசு கண்டுக் கொள்ளவில்லை

இந்நிலையில் குடியரசுத் தலைவர் இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து அவை சட்டமாக்கப்பட்டுள்ளது.   இது அரசிதழில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து நாடெங்கும் உள்ள விவசாயிகள் போராட்டம் அதிகரித்து வருகிறது.   விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி நடந்து வரும் இந்த போராட்டங்களையும் பாஜக அரசு கவனத்தில் கொள்ளாமல் உள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மாநில அரசுகள் விதி எண் 254(2) இன் கீழ் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த மத்திய அரசின் சட்டங்களை மாநில அரசுகள் நிறைவேற்றாமல் இருக்க வகை செய்யும் படி புதிய சட்டம் ஒன்றை இயற்ற வாய்ப்புக்கள் உள்ளதா என்பதைக் கண்டறியுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு சட்டம் இயற்றப்பட்டால் அதன் மூலம் மாநிலங்கள் விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டத்தை இயற்றாமல் இருக்க முடியும் எனக் கூறப்ப்டுகிற்து.  குறிப்பாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் விவசாயிகளுக்குக் குறைந்த பட்ச ஆதார விலை, மற்றும் விளை பொருட்கள் விநியோகத் தடை ஆகியவற்றை வலியுறுத்தும் இந்த சட்டத்தில் இருந்து விவசாயிகள் காப்பாற்றப்படுவார்கள் எனக் காங்கிரஸ் தலைவர் இந்த முயற்சியை எடுத்துள்ளார்.