சென்னை: முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறை குறிப்பிடும் சுயசரியை நூலான  ‘உங்களில் ஒருவன்’ நூலை  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று வெளியிடுகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ என்ற  அவரது சுய சரிதை நூலின் முதல் பாகம் இன்று கிண்டி அருகே உள்ள நந்தம்பாக்கம் வர்த்த மையத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த விழாவில், காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவரும், கேரள எம்.பி.யுமான ராகுல்காந்தி கலந்துகொண்டு, நூலை வெளியிட்டு உரையாற்றுகிறார்.

விழாவுக்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு முன்னிலை வகிக்கிறார். நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை ஏற்கிறார். திமுக மகளிர் அணி செயலாளரும் எம்பியுமான கனிமொழி வரவேற்று பேசுகிறார்.  இந்த விழாவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விழாவின் இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்துகிறார்.

“உங்களில் ஒருவன்” நூலின் முதல் பாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகள் இடம்பெற்றுள்ளன.. இந்த நூலை பதிப்பகத் துறையில் புகழ்பெற்றதும், பழமை வாய்ந்ததுமான ‘பூம்புகார் பதிப்பகம்‘ இந்த நுலை வெளியிடுகிறது.