‘கிஷான் பட்ஜெட்’: விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்! காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

Must read

டில்லி:

க்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஒரு வாக்குறுதிகூட பொய்யாக‘ இருக்கக்கூடாது என்ற வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் ( ‘kisan budget’) போடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் கடனை திருப்பி செலுத்தாவிட்டால், அது கிரிமினல் குற்றமாக கருதப்பபடாது.

அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகளின் விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும்.

தற்போது காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டிருப்பது போல, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம் ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

புதிய வேலை வாய்ப்ப்பு உருவாக்கப்படும்.

தீவிரவாதத்தை ஒழிக்க உறுதி

அரசு துறையில் காலியாக உள்ள 22 இலட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் .

2030க்குள் இந்தியாவில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்.

 

 

More articles

Latest article