டில்லி:

கில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் தேர்தல் அறிக்கை இருப்பதாக தெரிவித்த ராகுல்காந்தி,  விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடப்படுவதாகவும் அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில் நீட் தேர்வு குறித்தும் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு அதற்கு மாற்றாக மாநில அளவில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீட் தேர்வு தேவையா இல்லையா என்பது குறித்து மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிக்கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றப்படும்.

முன் நிபந்தனை எதுவும் இன்றி காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக பேச்சு நடத்தப்படும்.

மக்களவையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

நாட்டின் கல்விக்காக உள்நாட்டு உற்பத்தி 6சதவிகிதம் ஒதுக்கீடு செய்யப்படும்

அரசு மருத்துவமனைகளை வலுப்படுத்தி, ஏழைகளுக்கு உயர்தர சுகாதார வசதிகளை வழங்கப்படும்.